Thursday, 11 February 2016

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !!
உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────●●●────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.
ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.
அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.
────●●●────
இரண்டாவதாக ஒரு முனிவர்...
முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.
────●●●────
மூன்றாவதாக இந்திரன்...
கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.
────●●●────
நான்காவதாகக் குந்தி...
கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.
────●●●────
ஐந்தாவதாகச் சல்லியன்...
கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.
────●●●────
ஆறாவதாகக் கண்ணன்...
கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.
────●●●────
ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்..
நன்றி : Bhuvanesh Mahendran


# https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/1079142788790520/?type=3

Friday, 5 February 2016

குறள் 511

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

Thursday, 4 February 2016

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.
அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன்.
துரியோதனன்,கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் முடியவில்லை.அவனிருக்கும் இடமும் தெரிய வில்லை.மாலை நேரமும் நெருங்கியது.
" என்ன கிருஷ்ணா...சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே.!...
ஜயத்ரதனை எப்படிக் கொல்வது,"
என்றான் அர்ஜுனன்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் ,பகவான்.இருள் சூழ ஆரம்பித்தது.இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.
"சூரியன் அஸ்தமித்து விட்டான்.இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.
உடன் அர்ஜுனனைப் பார்த்து,
" அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.
ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன்.
தனது கோரமான தவப்பயனால்,ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.
இதைக்கேட்ட விருத்தட்சரன்,தன் தவ வலிமையால்
"யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி
" உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு ,"எனறார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது.
நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும்,சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே.! உன் சித்தம்.! எது நல்லதோ,அதைச் செய் என்று சொல்லி,அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.அவன் செய்வான்....
# https://www.facebook.com/Puradsifm/photos/a.436114063075998.97666.430388083648596/1070009543019777/?type=1&theater