Posts

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க...

மருத்துவர் மற்றும் இயந்திர வல்லுநர் இடையே உள்ள ஒற்றுமை...!

Image
இளைஞன் ஒருவன், மெக்கானிக் கடை ஒன்றில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்தான். அன்று, ஒரு காரின் இன்ஜினைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, அந்த ஊரின் பிரபலமான இதய சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது காரை செப்பனிடுவதற்காக அங்கு வந்தார். அவரை அருகில் அழைத்த இளைஞன், ''பார்த்தீர்களா... இந்த இன்ஜின்தான் காரின் இதயம்.. இந்த உதிரி பாகங்கள் அனைத்தும் வால்வுகள். நானும் உங்களைப் போல ஒவ்வொரு நாளும் இந்த வால்வுகளை இணைத்து ரிப்பேர் செய்கிறேன். உங்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், எனக்குச் சம்பளம் வெறும் இருநூறு ரூபாய். உங்களுக்கோ பல ஆயிரங்கள்'' என்றவன், நீண்டதொரு பெருமூச்சு விட்டுப் பொருமினான். அந்த மருத்துவர் ஒரு விநாடிகூடத் தயங்காமல், உண்மைதான். நீயும் அறுவை சிகிச்சை தான் செய்யறே...! ஆனா... கார் ஓடிக்கிட்டிருக்கும் போது செஞ்சு பாரு...!'' என்று கூறி விட்டுச் சென்றார். வாழ்வில், உண்பதும் உறங்குவதும் போல ஒப்பிடுவதும் வெகு இயல்பாக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வில் எல்லாம் இருந்தும், மகிழ்ச்சியின்றிப் பலர் தவிப்பதற்குக் காரணம், பொறாமை எனப்பட...

பெண்!!!

Image
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண ்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார். “இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?...

குடி குடியை கெடுக்கும் - நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்

Image
இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ...... ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான். நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன். அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன். எ...

ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள்!

Image
கிருஷ்ணன்:- தர்மத்தை பற்றி அனைவரும் விவாதிப்பர் இருந்தாலும், எவரும் அது பற்றி அறிய முற்படுவதில்லை! கர்ணன்:- தாமே கூறுங்கள் அதை அறியும் மார்க்கம் என்ன? கிருஷ்ணன்:- தர்மம் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவல்லது வாழ்வில் ஒருவனுக்கு அவமானம் நேர்ந்தால் அவன் தர்மத்தை பின்பற்ற தவறினான் என்பது பொருள். கர்ணன்:-ஒருவன் பிறப்பிலிருந்தே அவமானத்தை சகித்து வந்தால் அவன் ஆற்ற வேண்டிய பணி என்ன? கிருஷ்ணன்:- அருகதையை பெற எதிர்த்து நிற்க வேண்டும் அது அதர்ம வழியில் இருக்கலாகாது உனது அதிகாரத்தைப் பெற துணிந்து நில் எனினும் உனக்கு அதிகாரமற்ற எதன் மீதும் மோகம் கொள்ளாதே! இதன் தாத்பரியம் யாதெனில் தன்னில் வழிந்தோடும் அருவி மீது உயர்ந்த பருவதம் இச்சைக் கொள்வதில்லை நதியை தடுக்கும் இச்சையை பருவதம் கொள்ளுமேயானால் அது உடைத்தெறியப்படும். நதி நீரின் அதிகாரம் பெற்றது சமுத்திரம் ஒன்றே! கர்ணன்:- தம் வார்த்தை சமுத்திரத்தின் சக்தியைப் பற்றியதா? இல்லை பருவதத்தின் இயலாமையைப் பற்றியதா? கிருஷ்ணன்:- கடலோடு நதி கொண்டிருக்கும் பற்றை பற்றியது கர்ணா...!

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்!

Image
மனசு சஞ்சலப்படுகிறதா? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று  ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரி...

அமைதி கொள் மனிதா!

Image
வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை, வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு. வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை, கொம்புள்ள கடமானுக்கோ வீரம் இல்லை. கருங்குயிலுக்குத் தோகையில்லை தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை. காற்றுக்கு உருவமில்லை கதிரவனுக்கு நிழலில்லை நீருக்கு நிறமில்லை நெருப்புக்கு ஈரமில்லை ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான், ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான், எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான் இறைவன். அவனுக்கே இல்லை, அற்பம் நீ உனக்கெதற்கு பூரணத்துவம்? எவர் வாழ்விலும் நிறைவில்லை எவர் வாழ்விலும் குறைவில்லை புரிந்துகொள் மனிதனே அமைதி கொள் ! படித்ததில் பிடித்தது ...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

November 2013, அந்த மிக அற்புதமான சாரலும் மழையும் கூடிய அந்த நேரத்தில் குமார் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினான். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் சொந்த உழைப்பில் வாங்கப்பட்ட scarbio car -ல் தனது வாகன ௐட்டுநர் அழைத்துச் செல்ல அந்த வண்டி எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து நின்றது. இரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்தான்,  தான் முதல் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து வைத்திருந்த இடங்களில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு அமர்ந்தான். அந்த வண்டி மிக அற்புதமான குளிரான சூழலில் விச் விச் விச் என்று திருநெல்வேலியை நோக்கி பறந்தது. திருநெல்வேலியை நெருங்குமிடத்திலே கள்ளிக்காடு என்னுமிடத்தில் இரயில் நின்றது. அவசர அவசரமாக தன்னுடைய suitcase- களை எடுத்துக்கொண்டு, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கே அவனுக்காக ஒரு பழைய ambassador car ஒன்று காத்து நின்றது. அந்த car- ல் ஏறி அமர்ந்தான், அதிலே அவனுடைய பிள்ளைகள் எதிர்பார்க்க கூடிய music player இல்லை.  அவனுடைய மனைவி எதிர்பார்க்க்க் கூடிய AC இல்லை...

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!