கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்


November 2013, அந்த மிக அற்புதமான சாரலும் மழையும் கூடிய அந்த நேரத்தில் குமார் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கினான். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன் சொந்த உழைப்பில் வாங்கப்பட்ட scarbio car-ல் தனது வாகன ௐட்டுநர் அழைத்துச் செல்ல அந்த வண்டி எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து நின்றது.

இரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்தான்,  தான் முதல் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து வைத்திருந்த இடங்களில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு அமர்ந்தான்.

அந்த வண்டி மிக அற்புதமான குளிரான சூழலில் விச் விச் விச் என்று திருநெல்வேலியை நோக்கி பறந்தது. திருநெல்வேலியை நெருங்குமிடத்திலே கள்ளிக்காடு என்னுமிடத்தில் இரயில் நின்றது. அவசர அவசரமாக தன்னுடைய suitcase-களை எடுத்துக்கொண்டு, மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு இரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தான். அங்கே அவனுக்காக ஒரு பழைய ambassador car ஒன்று காத்து நின்றது. அந்த car-ல் ஏறி அமர்ந்தான், அதிலே அவனுடைய பிள்ளைகள் எதிர்பார்க்க கூடிய music player இல்லை. 

அவனுடைய மனைவி எதிர்பார்க்க்க் கூடிய AC இல்லை. அப்படியே அந்த வண்டி கிராமத்தின் நடு பகுதிக்கு சென்றது. ஒரு சுத்துகட்டு வீடு, அந்த வீட்டிற்குள் அவர்கள் இறங்கி உள்ளே நுழைந்தார்கள். அந்த இரண்டு suitcase-களையும் ஒரு அரை நிர்வாணமான மனிதர் எடுத்து உள்ளே கொண்டு போய் வைத்தார். இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு வணக்கம் சொன்னார். அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அந்த சாரலில் மகன் வந்திருப்பானே என்று அந்த வயதான தாயாரும் தகப்பனும் அங்கே பார்க்கிறார்கள், அப்படியே போய் தன்னுடைய முந்தானையால் மகன் தலையை துவட்டி விடவேண்டும் போல் இருந்தது, ஆனால் அவனிருக்க கூடிய வசதி வாய்ப்பு வாழ்க்கை தரத்தால் நெருங்க முடியவில்லை. அப்படியே அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள். அங்கே AC இல்லை. 

பிள்ளைகளுக்கு தேவையான internet வசதி அவர்கள் mobile-ல் கிடைக்க வில்லை. திடீரென்று current-ம் cut ஆனது. ஒரு மணி நேரம் வரவே இல்லை. வெந்து போனார்கள். அவன் அந்த முற்றத்தருகில் போடப்பட்ட கயிற்றுக்கட்டிலில் வந்து படுத்தான். அங்கே கொசு வத்தி ஏற்றி வைக்கவில்லை, வெகு விரைவில் அவனுக்கு தூக்கம் வந்தது, மிக நீண்ட நேரம் தூங்கிப்போனான். 

அதன்பிறகு அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டது போல் விழித்து பார்த்தான். வாசலில் வெடிச்சத்தங்கள் கேட்டது. வாணவேடிக்கைகள் கேட்டது. எழுந்து வெளியே வந்து பார்த்தான். 

அந்த தெருவே வண்ணமயமாக இருந்தது, தான் ஓடி ஆடி விளையாடிய அந்த தெருவில் எதிர் வீட்டு இராஜா, பக்கத்து வீட்டு பாண்டியன் எல்லோருமே தங்கள் குழந்தைகளோடு ஆனந்தமாக வெடிகளை வெடித்துக்கொண்டிருந்தார்கள். இவனுடைய மனம் இறுகி போயிருந்தது. உள்ளே போய் பார்த்தான். மனைவியும் tension – ஆக இருந்தாள். குழந்தைகளும் tension – ஆக இருந்தார்கள். என்னப்பா AC இல்லை, என்னப்பா வீடு இது என்று கேட்க, இவன் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி போனான். 

காலையில் அவனுடைய தாயார் அவனுக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புதுத்துணி போட்டுக்கொள்ள வேண்டுமென்று சொல்ல நினைக்கிறாள். ஆனால் எண்ணெய் என்று எடுத்தவள் மீதியை சொல்லவில்லை. அப்படியே விட்டுவிடுகிறாள். விதவிதமாக பலகாரங்கள் செய்யப்பட்டிருக்கிறது. ஏதோ நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒன்றிலுமே ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்தார்கள். 

தாய் தந்தையர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் மனைவி அப்படி செய்யமாட்டாளே என்பதற்காக அதையும் ஒதுக்கினான். பிறகு அன்றைக்கு 12 மணிக்கு மீண்டும் reservation coach – ஐ நோக்கி அவன் செல்ல வேண்டிய சூழல், எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை, அப்பாவுக்கு மகன் கொடுப்பதா, மகனுக்கு அப்பா கொடுப்பதா என்று தெரியாத சூழலில் அங்கிருந்து மீண்டும் அந்த பழைய ambassador car அவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. 

இரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டது. மீண்டும் reservation செய்யப்பட்ட AC coach – ல் ஏறி அமர்ந்தார்கள். அவன் மனம் பின்னோக்கி செல்கிறது. மனைவியும் குழந்தைகளும் முன்னோக்கி செல்கிறார்கள். சென்னை வரப்போகிறது என்று ஆவலாக அவர்கள் காத்திருக்கிறார்கள். தான் பிறந்து திரிந்த ஊரை விட்டு செல்கிறோமே, நண்பர்களை விட்டு செல்கிறோமே, தாய் தந்தையரை விட்டு செல்கிறோமே, என்ற எண்ண கலக்கத்தோடு அவன் சென்று கொண்டிருக்கிறான். சென்னை எழும்பூரில் இரயில் நின்றது. இறங்கினான், தன்னுடைய scorpio car வந்து நிற்கிறது. அதில் ஏறி அமர்ந்தான், மிக அற்புதமான விஜய் – அஜித் பாடல்கள் இசையாக ஒலித்தது. 

அந்த வண்டி AC – யுடன் மிக குளிரூட்டமான சூழலில் அவர்களை ஏற்றி பறந்தது. சென்னை நகரத்தில் வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் அந்த வாகனம் சென்று அற்புதமான பல்லாயிரக்கணக்கான நெருப்பு பெட்டிகளை அடுக்கி வைக்கப்பட்டது போல அந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகிலே போய் உரசிக்கொண்டு நின்றது. Watchman gate-ஐ திறந்தான். அவனுடைய coat suit அவன் அணிந்திருந்த அந்த shoe இவற்றையெல்லாம் பார்த்தபொழுது திருநெல்வேலி கள்ளிக்காட்டிலே ஒருவன் பெட்டியை இறக்கிக்கொண்டு உள்ளே சென்றானே, அவனையும் இவனையும் ஒப்பிட்டு பார்க்கிறான். 

ஆனாலும் மனம் ஆறுதலடைய மறுத்தது. அங்கிருந்து கொண்டு சென்ற suitcase – களையெல்லாம் lift – ல் வைத்தார்கள், lift 8 ஆவது மாடியிலே போய் நின்றது. இங்கிருந்து remote மூலமாக கதவை திறந்தார்கள். உள்ளே நுழைந்தார்கள், AC இயங்கியது, Internet இயங்கியது, மிகவும் சந்தோஷமாக அவர்களெல்லாம் இருக்க, தன்னுடைய வாழ்க்கையின் ரம்மியத்தை எண்ணி bathroom – லே தேம்பி தேம்பி அழுதுவிட்டு முகம் கை கால்களை கழுவி விட்டு வந்து அமர்ந்தான். Noodles செய்து வைக்கப்பட்டிருந்தது. 

பிள்ளைகள் கொத்தி குதறிக்கொண்டு இருந்தார்கள். இவனுடய மனம் மீண்டும் பழைய இடத்திற்கு சென்றது. அப்பொழுதுதான் நினைத்தான், வாழ்க்கை தாறுமாறாகிவிட்டது, சின்னாபின்னாவாகிவிட்டது, ஏதோ ஒரு உலகத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்று அவன் நினைத்து, தான் குடியிருந்த கோவிலையும், தன்னை தோள்மீது தாலாட்டி வளர்த்த தந்தையையும் எண்ணி அவன் மனம் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை. அன்று தூங்க மறுத்தவன் இன்றுவரை தூங்கவில்லை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவனுடைய அறையிலே எழுதிவைத்திருக்கிறான், வேறென்ன செய்யமுடியும் அவனால்...?

எழுதியவர்
வீ. அருமைக்கண்ணு

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!