கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

அது முடியாத காரியம்



ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு . வேற ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு.

இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க. ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது. இது வரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு.

இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க அவங்களாலயே திறக்க முடியல ! நம்மால எப்பிடி முடியும்னு பாதி பேர் கிளம்பிட்டாங்க. இதை கேட்ட கூட்டம் 10 பேரா குறைஞ்சுடுச்சு!

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!! இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும் கூறினார் . கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்று தயங்கினர் !

ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான். அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!

பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்! என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியை வழங்கினார்.

“அது முடியாத காரியம்” என எப்போது உன் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள்.... " நீ சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய் என்று" !!

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!