கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

காகம் கரைந்தால் விருந்தினர் வருவாரா?



அந்த காலத்தில் மாலுமிகள் கடல் பயணம் மேற்கொள்ளும்பொழுது கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிப்பதற்காக சில காகங்களை தங்களோடு கொண்டு செல்வர். நடுக்கடலில் கப்பல் பயணித்துக்கொண்டிருக்கும் பொழுது கடற்கரைக்கு செல்ல விரும்பினால், கடற்கரை எந்த பக்கம் உள்ளது என்று கண்டுபிடிக்க, அவர்கள் தங்களோடு கொண்டுவந்துள்ள சில காகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.. அந்த காகங்கள் எந்த திசையில் பயணிக்கிறதோ, அந்த திசையில் தான் கரை உள்ளது என்று மாலுமிகள் வெகுவாக கணித்துவிடுவார்கள்.

அதே சமயம் அந்த காகங்கள் ஊருக்குள் கரைந்து கொண்டே சென்று எதாவது ஒரு மரத்திலோ அல்லது வீட்டின் கூரையிலோ அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும். அதை பார்க்கும் ஊரார் கடலில் இருந்து மாலுமிகள் வரப்போகின்றனர் என்பதை புரிந்து கொண்டு, வருபவர்களை விருந்தாளியாக பாவித்து, வந்ததும்  இளைப்பாற தேவையான வசதிகளை செய்து கொடுப்பர்.

இச்செயலே பின்னாளில் காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார் என்று சுருக்கமாக சொல்லப்பட்டது. 

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!